உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் கேஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.100 குறைக்க டெல்லியில் நடந்த ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.சமையல் கேஸ் சிலிண்டர் விலையை ரூ.200 குறைப்பதாக மோடி அரசு ஏற்கனவே அறிவித்த நிலையில் மீண்டும் ரூ.100 குறைத்துள்ளது.
முன்னர் எரிவாயு உள்ளிட்டு அனைத்துப் பொருட்களின் விலையையும் கட்டுக்கடங்காமல் உயர்த்திவிட்டு, தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சமையல் கேஸ் சிலிண்டரின் விலையை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளதை குறித்து சந்தேகம் அளிப்பதாகப் பலரும் கூறுகின்றனர்.